கவிதா அலுவலகம் முடிந்து காரில் வீட்டிற்கு போகும் போது தீடீரென காரின் முன்பக்க கண்ணாடியை பார்த்தாள், ஒரு போலீஸ் வண்டி இவள் காரை பின்தொடர்ந்து வந்து கொண்டு இருந்தது.  போலீஸ் கார் வேகமாக இவள் காரை முந்தி வந்து, இவள் கார் முன்னே வந்து நின்றது.

அதில் இருந்து ஒரு இளமையான போலீஸ் அதிகாரி இறங்கினார். நீங்கள் கவிதாவா?  என்று கேட்டார்.

ஆம் என்றாள்,

என் பெயர் பாரதி, நான் இந்த ஏரியாவுக்கு புதுசா வந்த  இன்ஸ்பெக்டர், உங்களிடம் உங்கள் கணவர் இறந்ததை பற்றி ஒரு சின்ன விசாரணை உள்ளது, பக்கத்தில் இருக்கும் காபி ஷாப்பில் ஒரு காபி சாப்பிட்டுவிட்டு அப்படியே நான் உங்களை விசாரிக்கிறேன்.

கவிதாவும் சரி என சொல்லி அந்த போலீஸ் காரை பின் தொடர்ந்தாள்.  சிறிது நேரத்தில் இருவரும் காபி ஷாப் அடைந்தனர்.

கவிதா சரி விசயத்திற்கு வருவோம், நீங்கள் பயம்படும் படி ஒன்றும் இல்லை, ஒரு சாதாரண விசாரணை மட்டும் தான் இது, பயபடாமல் உங்களை பற்றி கொஞ்சம் சொல்லுங்கள். என்று சொல்லி விட்டு இரு ஐஸ் காபி ஆர்டர் செய்தார்

நான் இந்த சென்னைக்கு வந்து பத்து வருடம் ஒரு பஞ்சை போல பறந்துவிட்டது.  முதலில் ஒரு சின்ன கம்பெனியில் வேலைக்கு சேர்ந்தேன், மாதம் சுமாரா அப்ப ஒரு பத்தாயிரம் சம்பளம் வாங்கினேன்.  தினமும் இந்த பஸ்சில் ஆண்களின் கூட்டத்தில் பிழிந்து பாதி கற்பை இழந்து அலுவலகம் சென்று வந்தேன். ஆனால் ஒரு வைராக்கியத்துடன் மென் மேலும் நிறைய கம்ப்யூட்டர் கோர்ஸ் மற்றும் இங்கிலீஷ் கோர்ஸ் படித்து எனது திறமையை வளர்த்து கொண்டேன். அது மட்டுமில்லாமல் இரண்டு வருட இடைவெளியில் ஒவ்வொரு கம்பெனியாக மாறினேன்.  எனது பதவியும் சம்பளமும் கூடியது. ஒரு இடத்தில் கூட எனது புற அழகை காட்டி நான் வேலைக்கு சேரவில்லை.  எல்லா இடத்திலும் எனது திறமையை மட்டும் காட்டி உயர்ந்தேன்.  சில அலுவலகத்தில் என்னிடம் தவறாக நடக்க நினைக்கும் நபர்களிடம் இருந்து நான் சிறிது விலகி இருக்க பழகி கொண்டேன் அல்லது அந்த அலுவலகத்தில் இருந்து வேறு ஒரு கம்பனிக்கு நல்ல சம்பளத்தில் பதவி உயர்வுடன் மாற்றம் ஆனேன். இப்ப கடந்த ஓராண்டாக ஒரு பன்னாட்டு  அலுவலகத்தில் உயர் பதவியில் இருக்கிறேன், மாதம் சுளையாக அறுபதாயிரம் சம்பளம்.

போன வருடம் தான் எனக்கு கல்யாணம் நடந்தது, என் அம்மா மட்டும் தனியாக திருச்சியில் இருக்கிறாள்.  எனது கணவரும்  ஒரு கம்ப்யூட்டர் பட்டதாரி, ஒரு அலுவலகத்தில் கம்ப்யூட்டர் ப்ரோக்ராம்மராக பணியாற்றி கொண்டு இருந்தார்.  இருவரும் ஒரு ஆறு மாதம் காதலித்து திருமணம் செய்து கொண்டோம்.  அவர் காதலிக்கும் போது எப்பவும் என் அம்மாவை பற்றி தான் அதிகம் கேட்பார், அது தான் நான் அவருடன் காதல் கொள்ளவும் ஒரு காரணமாக இருந்தது.  அந்த ஆறு மாதமும் அவருடன் சேர்ந்து பீச், சினிமா என்று வரம்பு மீறாமல் சுற்றினோம்.  முதல் மூன்று மாதம் கழித்து கொஞ்சம் கொஞ்சமாக அவர் என்னிடம் எல்லை மீற ஆரம்பித்தார். அப்பொழுது நான் கொஞ்சம் சுதாரித்துக்கொண்டு கல்யாண பேச்சை ஆரம்பித்தேன். நான் வாங்கிய சம்பளமும் ஒரு காரணம், சிறிது தயக்கத்திற்கு பிறகு ஒரு நாள் கல்யாணத்திற்கு சம்மதித்தார். அவர் அம்மா, அப்பா இப்போது உயிருடன் இல்லை, ஒரு அண்ணன் மற்றும் அண்ணன் குடும்பத்தினர் மட்டும் கல்யாணத்திற்கு வந்தனர்.  எளிமையாக வடபழனி முருகன் கோவிலில் எங்கள் கல்யாணம் நடந்தது, எங்கள் திருமண வாழ்க்கையும் அருமையாக ஓடின, என்று சொல்லி முடிக்கும் போது இரு ஐஸ் காப்பியை சர்வர் கொண்டு வந்து டேபிளில் வைத்தான். இன்ஸ்பெக்டர், கவிதா டேக் இட் என்று கூறினார்.  அதை மெதுவாக எடுத்து ஒரு மடக்கு குடுத்து விட்டு மறுபடியும் தொடர்ந்தாள்.

எங்களின் திருமண வாழ்க்கை நன்றாகவே ஓடின, சில மாதங்கள் கழித்து அவருடைய அலுவலகத்தில் எற்பட்ட ஒரு நட்டத்தின் காரணமாக அலுவலகம் யாருக்கும் மூன்று மாதம் சம்பளம் கொடுக்காமல் இழுத்து மூடினர்.  அவர் எவ்வளவு தேடியும் ஒரு வேலையும் கிடைக்கவில்லை,  வேலை கிடைக்காத விரத்தியில் கொஞ்சம் குடிக்க ஆரம்பித்தார்.

இதற்கிடையில் அலுவலக வேலை பளு காரணமாக எனது வயிற்றில் கரு நன்றாக வளரவில்லை, அதனால் போன மாதம் தான் இருவரும் மலர் மருத்துவமனை சென்று கருவை கலைத்தோம்.  வேலை மற்றும் கருகலைப்பு அவருக்கு அதிக மன கஷ்டத்தை தந்தன.   அன்று இரவு அதிகம் குடித்து இருந்ததால் அவருக்கு வந்த இருதய அடைப்பு கூட அவரால் உணர முடியாமல் இறந்துவிட்டார் என்று சொல்லி அழுதாள்.

ஓகே கூல்; கவிதா …….. என்று சொல்லிவிட்டு; உடனே இன்ஸ்பெக்டர் அந்த சர்வரை அழைத்து பணம் தந்து விட்டு, சரி கவிதா உங்க கணவர் மரணத்தை பற்றி முழுவதுமாக விசாரணை முடிந்து விட்டது, இனி தேவைபட்டால் உங்க நம்பர்க்கு நானே அழைக்கிறேன் என்று சொல்லி விட்டு விடை பெற்றார்.

அன்று இரவு முழுவதும் கவிதாவுக்கு தூக்கம் வராமல் அழுது கொண்டே இருந்தாள்.  மறுநாள் வழக்கம் போல காரை எடுத்து கொண்டு அலுவலகம் சென்றாள்.  நேற்று நடந்த விசாரணை பற்றி எதுவும் வெளியே காட்டி கொள்ளாமல் வேலையில் கவனத்தை திருப்பினாள்.  இரண்டு நாள் கழித்து  இன்ஸ்பெக்டர் தொலைபேசியில் அழைத்தார், நீங்க ப்ரீயா இருந்தால் கொஞ்சம் வரமுடியுமா என்று கேட்டார்.  எப்ப எங்க வரணும் என்று கவிதா கேட்டாள்.

இன்ஸ்பெக்டர் நேற்று நாம் சந்தித்த அதே காபி ஷாப் என்று கூறினார்.

உடனே வேகமாக அலுவலக வேலைகளை முடித்து விட்டு காரை எடுத்து கொண்டு காபி ஷாப் சென்றாள். இவள் போன போது இன்ஸ்பெக்டர் அங்கு வரவில்லை, சுமார் ஒரு அரை மணி நேர தாமதத்திற்கு பிறகு தான் வந்தார்.  வந்தவுடன் இங்கே வேண்டாம், நாம் கொஞ்சம் தூரம் நடந்து அருகில் உள்ள பீச்சில் சென்று பேசுவோம் என்று சொன்னார். இவளும் சரி என்று சொல்லிவிட்டு அவருடன் சென்றாள்.

இருவரும் பீச்யை அடைத்தவுடன், இன்ஸ்பெக்டர் ஏன் கவிதா உங்கள் கணவரை கொலை செய்தீங்க என்று கேட்டு அவள் கண்ணை பார்த்தார்.

அவள் என்ன சொல்லுறீங்க இன்ஸ்பெக்டர் அது தான் நான் அன்றைக்கே எல்லாத்தையும் ஒன்று விடாமல் உங்களிடம் சொல்லி விட்டேன் என்று கூறினாள்.

இன்ஸ்பெக்டர் ஆம்மாம் கவிதா நீங்க அன்று ஒன்னு கூட விடாமல் என்னிடம் எல்லாத்தையும் சொன்னீர்கள்.   நீங்கள் கடந்து வந்த பாதை பற்றி மறைக்காமல் சொன்னீர்கள், உங்கள் காதல் மற்றும் கல்யாணம் நடந்த விபரத்தை சொன்னீர்கள்; இவ்வளவு ஏன் உங்கள் கணவர் வேலை இழந்ததை; குடிபழக்கத்தை   மற்றும் உங்கள் கரு கலைப்பை கூட மறைக்காமல் சொன்னீர்கள்; ஆனால் நீங்கள் மலர் மருத்துவமனையில் வாங்கிய விஷம் பற்றி ஏன் ஒன்றும் சொல்லவில்லை  கவிதா என்று கேட்டுவிட்டு சத்தமாக சிரித்தார்.

இன்ஸ்பெக்டர் சொன்னதையும் அவர் சிரிப்பதையும் பார்த்து கவிதா ஓவென அழுதாள்.

இப்ப அழுது ஒன்றும் ப்ரோஜனமில்லை, நீங்கள் உண்மையை தயவு செய்து ஒப்புக்கொள்ளுங்கள் கவிதா என்று கூறினார்.

கவிதா கண்ணீரை துடைத்து விட்டு மறுபடியும் அவள் கதையை சொல்ல ஆரம்பித்தாள். முதல் மூன்று மாதம் திருமண வாழ்க்கை நன்றாகவே இருந்தது, அதற்கு அப்பறம் அவர் சரியாக வேலைக்கு செல்வது இல்லை.  வாரத்திற்கு ஒரு முறை குடிக்க ஆரம்பித்தார். அவர் குடிக்கும் நாள்களில் என்னிடம் மிகவும் கேவலமாக நடந்து கொள்வார்;  ஆனால் காலையில் அப்படி எதுவும் நடக்காதது போல என்னிடம் ஒரு மன்னிப்பு கேட்டு விட்டு வெளியே செல்வார்.  சரிவர சம்பளமும் வீட்டிற்க்கு கொடுக்க மாட்டார். என்னுடைய சம்பளம் முழுவதையும் வாங்கி கொள்வார்.  நான் ஒரு பன்னாட்டு கம்பெனியில் வேலை செய்வதால் அடிக்கடி வெளியூர் செல்ல வேண்டி இருக்கும், எனக்கு ஒரு புது டிரஸ் எடுத்தால் கூட அதற்க்கும் கணக்கு கேட்பார்.

இப்படியே ஒரு ஆறு மாதம் கழிந்தது.  இருந்த வேலையும் இரு மாதங்களுக்கு முன்பு விட்டு விட்டார்.  வாரத்திற்கு ஒரு முறை எனது ATM card  எடுத்து பாரில் சென்று நல்ல உயர்தர சரக்கை வாங்கி கொண்டு வந்து வீட்டை நிரப்புவார்.  தினமும் குடித்து விட்டு ஒரு விலைமாதை  போல என்னை பல கோணங்களில் படம் பிடிப்பார். காலையில் எழுந்தவுடன் அதை தினமும் நான் அளிப்பேன்.  முன்பு வாரத்திற்கு ஒரு முறை என்ற குடிப்பழக்கம் தினம் தினம் என்று மாறியது. கடந்த ஒரு வார காலமாக மிகவும் அதிகமாக குடித்து என்னை மிகவும் கேவலமாக நடத்தினர்.

போன மாதம் எங்க அம்மாவிற்கு ஒரு பத்தாயிரம் அனுப்பினேன், அதற்க்கு யாரை கேட்டு பணம் அனுப்பினாய் என்று என்னை அடித்தார்.  அடுத்த இரண்டு நாள்களில் எங்கள் அலுவலகத்தில் இருந்து ஒரு ப்ராஜெக்ட் விசயமாக நான் ஒரு பத்து நாள் பெங்களூர் சென்றேன்.  நான் வரும் வரை அவர் முழுவதும் குடித்து எனது பாதி சம்பள பணத்தை காலி செய்து இருந்தார்.  இதற்கிடையில் நான் போன மாதம் கர்ப்பம் அடைந்தேன்,  அதை என் கணவரிடம் ஆசையாக சொன்னேன், ஆனால் அதற்கு அவர் பெங்களூரில்  யாருடன் ————– என்று  கேட்டதும் மட்டுமில்லாமல் கருவை கலைக்க வற்புறுத்தினார்.  அதை கேட்டதும் என் இதயமே நொறுங்கியது என்று சொல்லி விட்டு வாய்விட்டு அழுதாள்.

கவிதா கண்ட்ரோல் யுவர் ஸெல்ப் என கூறினார் இன்ஸ்பெக்டர்.  .

இவன் பிள்ளையை வயிறில் சுமப்பது பாவம் என எண்ணி நானும் சம்மதம் தெரிவித்தேன்.  போன வாரம் மலர் மருத்துவமனை சென்று கருவை கலைத்தோம்.

கரு கலைப்புக்கு முந்தய நாள் என் கணவர் அதிகம் குடித்து விட்டு என்னை பல முறை படம் பிடுத்து என்னை சித்திரவதை செய்தார், வழக்கம் போல காலையில் வேகமாக எழுந்து நான் அளிப்பதற்கு அவர் போன் எடுத்தேன், அப்போது தான் பார்த்தேன் அவர் பல நண்பர்களுக்கு அதை பகிர்வு செய்தார் என்பதை எனக்கு வந்த கோபத்தை என்னுள் பூட்டி வைத்து கொண்டு அவருடன் மருத்துவமனை சென்றேன்.  அங்கு அங்கும் இங்கும் விளையாடிய சின்ன குழந்தைகளை பார்த்து என்னுள் இருந்த தாய்மை குணம் மேல வந்தது, கருவை கலைப்பது சரியா என என் மனதுக்குள் ஒரு பட்டிமன்றம் நடந்தது. ஆனால் என் அருகில் இருக்கும் இந்த கீழ்த்தரமான மனிதனுடன் சேர்த்து குழந்தை பெற்று கொள்ள விரும்பாமல் மருந்து வாங்கும் போது எலி மருந்தையும் வாங்கினேன். அவர் குடிக்கும் முன்பே அவர் வைத்திருந்த சரக்கு பாட்டிலில் அந்த மருந்தை கலக்கினேன்.  அதை அறியாமல் அவர் அதை குடித்து இறந்துவிட்டார்.   காலையில் அவர் இறப்பை உறுதி செய்து கொண்டு  நான் தான் போலீஸ்சை அழைத்தேன்.  முதலில் போலீஸ் வரும் வரை குற்றத்தை ஒப்பு கொண்டு சிறை சொல்ல முடிவு செய்தேன், அந்த நேரத்தில் என் அம்மாவிடம் இருந்து போன் வந்தவுடன் என் முடிவை மாற்றினேன் என கூறி  அழுகையுடன் தனது வாக்குமூலத்தை முடிவு செய்தாள்.

நீங்கள் செய்த ஒரே தவறு உங்கள் கணவன் இறந்தவுடன் போலீஸ் ஸ்டேஷன்க்கு போன் போட்டது தான், அவர்கள் வந்து உங்கள் கணவரின் உடலை பிரேதபரிசோதனை செய்து பார்த்த போதே தெரிந்து விட்டது அவர் பாய்சன் சாப்பிட்டு இறந்து போனது.

பிரேதபரிசோதனை முடிவு வந்தவுடன் ஒரு நாள் உங்களை பார்க்க நான் உங்கள் வீட்டிற்கு வந்தேன், ஆனால் நீங்கள் வீட்டில் இல்லை, உடனே போகலாம் என்று முடிவு செய்து கிளம்பும் போது என் கார் நின்ற இடத்தில ஒரு எலி செத்து இருந்தது, அதை பார்த்தவுடன் என் போலீஸ் புத்தி வேலை செய்ய ஆரம்பித்தது. உடனே உங்க வீட்டை சுற்றி பார்க்கும் போது தான் அந்த விஷ பாட்டிலை பார்த்தேன், அதில் விலையும்; மலர் மருத்துவனை பெயரும் போட்டு இருந்தது. நீங்கள் என்னிடம் சொன்ன கருகளைப்பிலும் அதே மலர் மருத்துவனை வந்தவுடன் அங்கு சென்று அங்கு இருந்த கம்ப்யூட்டர்ல் உங்கள் பெயர் பதிவு செய்ததும் நீங்கள் உங்களுக்கு வாங்கிய மருந்துடன் தான் இந்த விஷம் வாங்கியது உறுதியானது.  கேமராவில் அன்று வாங்கிய நபர்களை பார்க்கும் போது மேலும் உறுதியானது நீங்கள் விஷம் வாங்கியது என்று சொன்னார்.

இதை கேட்டதும் அவள் மேலும் மேலும் அழுதாள்.

இன்ஸ்பெக்டர் பலமாக சிரித்து கைதட்டி மகிழ்ந்தார், கவிதாவுக்கு ஒன்னும் புரியவில்லை.   நீங்கள் உங்கள் கணவருக்கு கொடுத்த தண்டனை மிக சரியானது, ஆனால் உன் கணவர் விஷம் குடித்து தான் இறந்துள்ளார், இருதய வலியால் இல்லை. உன்  கணவர் வேலை இல்லாமல்  இருந்த காரணத்தாலும் மேலும் நீங்கள் ஆசையாக உருவாக்கிய கரு கலைந்ததாலும் அவர் அதிக மனஉளைசல்களுக்கு ஆளாகி தற்கொலை செய்து கொண்டார், இது ஒரு கொலை இல்லை இன்று இந்த விசாரணையை இத்துடன் முடித்து கொள்கிறோம்.  நீங்கள் வழக்கம் போல உங்கள் வேலையையும் உங்கள் அம்மாவையும் பாருங்கள் என்று கூறி விடை பெற்றார்.

தேங்க்ஸ் என கூறினாள்.

இதற்கு எதற்கு தேங்க்ஸ்; இந்த பாரதி கண்ட புதுமை பெண் நீங்கள் என்று கூரியது மட்டுமில்லாமல் அவளுக்கு ஒரு மரியாதை வணக்கம் செய்து விட்டு நகர்ந்தார்.

கற்பு நிலையென்று சொல்ல வந்தார்,

இரு கட்சிக்கும் அஃது பொதுவில் வைப்போம்;
வ்ற்புறுத்திப் பெண்ணைக் கட்டிக் கொடுக்கும்
வழக்கத்தைத் தள்ளி மிதித்திடுவோம்
பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும்
பாரினில் பெண்கள் நடத்தவந்தோம்;
எட்டு மறிவினில் ஆணுக் கிங்கேபெண்
இளைப்பில்லை காணென்று கும்மியடி!     – பாரதியார்

Share This Book